ஊழல் புகாரில் சிக்கிய 39 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது விசாரணை.


தொடர்ந்து எழுந்த ஊழல் குற்றச்சாட்டுகளின் காரணமாக 39 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது. குடிமைப்பணி அதிகாரிகளை கட்டுப்படுத்தும் மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை இது தொடர்பான விசாரணையை மேற்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ள 39 பேரில், 29 பேர் மத்திய அரசின் பல்வேறு துறைகளில், செயலாளர் அந்தஸ்தில் இருக்கும் ஐஏஎஸ் அதிகாரிகள் என்றும், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், மற்றொரு அதிர்ச்சிகரமான தகவலும் வெளியாகியிருக்கிறது.
இதுதவிர சில மூத்த அதிகாரிகள் உட்பட 68 அதிகாரிகள் மீதும் ஏராளமான புகார்கள் வந்ததை அடுத்து விசாரணை நடத்தப்படுவதாகவும், அவர்களின் பணி ஆவணங்கள் மறு ஆய்விற்கு உட்படுத்தப்படுவதாகவும் தெரிகிறது. சென்றாண்டு மட்டும் திருப்தியாக செயல்படாத 129 ஊழியர்களுக்கு மத்திய அரசு கட்டாய ஓய்வு கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.