குடும்ப வறுமையால் இரட்டைக் குழந்தைகளை கொன்றதாக தாய் கைது.


காற்றாடிதட்டு விளையை சேர்ந்த வாழைக்காய் வியாபாரி கண்ணன் மற்றும் அவரது மனைவி திவ்யா தம்பதியருக்கு, இரண்டு வயதில் பெண் குழந்தை இருந்த நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன. இந்நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை இரட்டை பெண் குழந்தைகள் இறந்துவிட்டதாகக் கூறி, வீட்டின் பின்பகுதியில் பெற்றோர் அடக்கம் செய்துள்ளனர்.
குழந்தைகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக, அக்கம்பக்கத்தினர் குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிக்கு தகவல் அளித்தனர். இதுகுறித்து, குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரி, போலீஸாரிடம் புகார் அளித்ததன் அடிப்படையில், நேற்று போலீஸார் குழந்தைகளின் உடலை தோண்டியெடுத்து பெற்றோரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், பெண் குழந்தைகளை வளர்த்து திருமணம் செய்துவைக்க பெரும் பணம் செலவாகும் என்பதாலும், குடும்பத்தின் வறுமையாலும் குழந்தைகளை அவரது தாயே கொலை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, தாய் திவ்யாவை போலீஸார் கைது செய்தனர். குழந்தைகள் எவ்வாறு கொலை செய்யப்பட்டனர்? இந்த கொலையில் குழந்தைகளின் தந்தைக்கு என்ன பங்கு என்பது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.