ஆந்திர வனப்பகுதியில் செம்மரம் வெட்டியதாக 25 தமிழர்கள் கைது.


ஆந்திர வனப்பகுதியில் செம்மரம் வெட்டிக் கடத்தியதாகக் கூறி 25 தமிழர்களை ஆந்திர செம்மரக் கடத்தல் தடுப்புபிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் கதிரிநாயுடு வனப்பகுதியில் சிலர் செம்மரம் வெட்டி கடத்துவதாக வந்த ரகசிய தகவலை அடுத்து ரோந்து சென்றதாக, செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.
வனப்பகுதியில் 25 பேர் கொண்ட கும்பல் செம்மரங்களை வேனில் ஏற்றி கொண்டிருந்ததாகவும், தமிழகத்தைச் சேர்ந்த அந்த 25 பேரையும் சுற்றி வளைத்துக் கைது செய்ததாகவும் போலீசார் கூறியுள்ளனர். வேன் மற்றும் 40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 28 செம்மரங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ள போலீசார், கைது செய்யப்பட்டவர்களை கைகளை கட்டி வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
தப்பியோட முயற்சிக்கும்போது காலில் 4 பேருக்கு காயம் ஏற்பட்டதையடுத்து அவர்களை, போலீசார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.