டிடிவி தினகரனுக்கு 21 எம்எல்ஏ-க்கள் ஆதரவு.


டிடிவி தினகரனுக்கு 21 எம்எல்ஏ-க்கள் ஆதரவு தெரிவித்துள்ளதால் தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக இரண்டாக உடைந்தது. சசிகலா, ஓபிஎஸ் தலைமையில் தனித் தனி அணிகள் உருவாகின. சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு செல்ல நேரிட்டது. சிறைக்கு செல்லும் முன் டிடிவி தினகரனை அதிமுக துணைப் பொதுச் செயலாளராக நியமித்தார். முதலமைச்சராக எடப்பாடி பதவியேற்றார். இதனையடுத்து அதிமுக கட்சிப் பணிகளை, தினகரனே பார்த்துக் கொண்டார். ஆனால், இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயன்ற புகாரில் தினகரனும் கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து ஓபிஎஸ் அணியும், பழனிசாமி அணியும் இணைவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஓபிஎஸ் அணியின் நிபந்தனையான, சசிகலா, தினகரனை கட்சியிலிருந்து விலக்கி வைப்பதாகவும் பழனிசாமி அணி அறிவித்தது. ஆனால் மாறி மாறி இருதரப்பும் குற்றச்சாட்டுகளை முன் வைத்ததால், அணிகள் இணைப்பில் இழுபறி ஏற்பட்டது.
தற்போது தினகரன் ஜாமீனில் வெளிவந்துள்ளார். வெளிவந்ததுமே கட்சிப் பணிகளை மீண்டும் தொடங்குவேன் என திட்டவட்டமாகக் கூறிவிட்டார். ஆனால் நிதியமைச்சர் ஜெயக்குமார், கட்சியிலிருந்து தினகரன் ஒதுங்கி இருக்க வேண்டும் என கூறியிருக்கிறார். இதனயைடுத்து அதிமுக, பழனிசாமி, ஓபிஎஸ், டிடிவி தினகரன் தலைமையில் 3 அணிகளாக பிரிவதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக, டிடிவி தினகரன் பக்கம் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்பட 21 எம்எல்ஏ-க்கள் இருக்கிறார்கள். நேற்று வரை 11 எம்எல்ஏ-க்கள் மட்டுமே தினகரனுக்கு ஆதரவாக இருந்த நிலையில் இன்று மேலும் 10 எம்எல்ஏ-க்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால், அவரது செல்வாக்கு உயர்ந்துள்ளது. இது எடப்பாடி அரசுக்கு சற்று பின்னடைவாகவே கருதப்படுகிறது.
இதனிடையே, தமிழக அமைச்சர்களின் அறையில் திடீரென முதலமைச்சர் பழனிசாமி புகைப்படமும் வைக்கப்பட்டுள்ளது. இது பழனிசாமி தன் செல்வாக்கை தக்க வைக்க முயற்சி மேற்கொள்கிறார் என்பதை காட்டுவதாக உள்ளது.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.