2016 – 2017 ஆம் ஆண்டில் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி சரிவு.


2016 – 2017 ஆம் ஆண்டில் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 7 புள்ளி 1 சதவீதமாக சரிந்துள்ளது. கடந்த நிதிஆண்டின் கடைசி காலாண்டாக கருதப்படும் ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலத்தில், வளர்ச்சி விகிதம் 6 புள்ளி 1 சதவீதம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
3வது காலாண்டில் 7 சதவீதமாக இருந்த வளர்ச்சி விகிதம், கடைசி காலாண்டில் குறைந்துள்ளது. கருப்பு பணத்தை ஒழிப்பதற்கான, பண மதிப்பிழப்பு நடவடிக்கை, 4வது காலாண்டின் வளர்ச்சியை பாதித்துள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதன்மூலம், 2016 – 2017 நிதியாண்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு வளர்ச்சி விகிதம் 7 புள்ளி 1 சதவீதமாக உள்ளது. 2015 – 2016 நிதியாண்டின் வளர்ச்சி விகிதம் 8 சதவீதமாக இருந்த நிலையில், 0 புள்ளி 9 சதவீதம் அபொருளாதாரம் சரிவை கண்டுள்ளது. இதனால், உலகளவில் வேகமான பொருளாதார வளர்ச்சி கொண்ட நாடு என்ற மதிப்பை இந்தியா இழந்துள்ளதாக கூறப்படுகிறது.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.