திமுக, திரிணாமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் உள்ளிட்ட 17 கட்சிகள் மீராகுமாருக்கு ஆதரவு.


குடியரசுத் தலைவர் தேர்தலில் 17 எதிர்க்கட்சிகளின் சார்பில் மக்களவை முன்னாள் சபாநாயகர் மீரா குமார் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் தேர்தல் பற்றி ஆலோசிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் மன்மோகன்சிங், லாலு பிரசாத் யாதவ், கனிமொழி, சீதாராம் யெச்சூரி உள்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்துக் கொண்டனர். இக்கூட்டத்தில் பங்கேற்ற சரத்பவார் மூன்று பெயர்களை பரிந்துரைத்தார். இதில் மக்களவை முன்னாள் சபாநாயகர் மீரா குமாரை வேட்பாளராக நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் துணை பிரதமர் ஜகஜீவன்ராமின் மகளான மீராகுமார், பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு எதிராக போட்டியிடுகிறார். மீரா குமாரின் பெயரை அறிவித்த சோனியா காந்தி அனைத்துக் கட்சியினரும் ஆதரவு அளிக்கும்படி கேட்டுக் கொண்டார். மீராகுமாருக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி உட்பட பலர் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். இதையடுத்து, மீரா குமார் வரும் 27 அல்லது 28ம் தேதி தமது வேட்புமனுவை தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.