கத்தாருடன் நல்லுறவை புதுப்பிக்க 13 நிபந்தனைகள் விதித்த அரபு நாடுகள்.


நல்லுறவை மீண்டும் புதுப்பிக்க வேண்டுமானால் 13 நிபந்தனைகளை ஏற்குமாறு கத்தாரை, வளைகுடா நாடுகள் வலியுறுத்தியுள்ளன. தீவிரவாதிகளுக்கு நிதி உதவி அளிப்பதாக கத்தார் மீது குற்றம்சாட்டிய சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், எகிப்து மற்றும் பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகள் கத்தார் உடனான நல்லுறவை முற்றிலும் துண்டித்தன.
இதனால் எண்ணெய் வர்த்தகம் பெரிதும் பாதிக்கப்பட்டதுடன், உலக அளவிலான வர்த்தகத்திலும் இப்பிரச்சனை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இந்தப் பிரச்சனையை தீர்க்கும் நோக்கில் கத்தாருக்கு 13 நிபந்தனைகளை வளைகுடா நாடுகள் விதித்துள்ளன. ஈரானுடன் உறவை குறைத்துக் கொள்வது, அல் ஜசீரா தொலைக்காட்சியை மூடுதல், கத்தாரில் உள்ள துருக்கி ராணுவ தளத்தை மூடுதல், தீவிரவாதிகளுடன் உறவை முறித்துக் கொள்ளுதல் உள்ளிட்ட 13 நிபந்தனைகளுக்கு கட்டுப்பட வேண்டும் என்று குவைத் வாயிலாக கத்தாருக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
Labels:

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.