உயிர்க்கொல்லி வைரஸான ஜிகா வைரஸ் இந்தியாவிலும் கண்டுபிடிப்பு.


உயிர்கொல்லியான ஜிகா வைரஸ் இந்தியாவிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது.
குஜராத் மாநிலத் தலைநகர் அகமதாபாத் அருகே உள்ள பாபுநகர் பகுதியில் இரண்டு கர்ப்பிணிகளுக்கும், முதியவர் ஒருவருக்கும் ஜிகா வைரஸ் தொற்றியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த விஷயத்தில் குஜராத் அரசு மெத்தனமாக நடந்து கொள்வதாக உலக சுகாதார அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் இதனை மறுத்துள்ள குஜராத் சுகாதாரத்துறை அமைச்சகம், அகமதாபாத் பகுதியில் ஜிகா வைரஸ் தாக்குதல் ஒருவருக்கு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும், தற்போது அவர் தீவிர சிகிச்சையில் இருப்பதாகவும் கூறியுள்ளது.
வேறு யாரும் ஜிகா வைரஸால் பாதிக்கப்படவில்லை என்றாலும் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்து உள்ளார்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.