மது அருந்தும் பாருக்கு தீ வைக்கப்பட்டதால் பரபரப்பு..


புதுச்சேரி அருகே மதுபானக் கடைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள், அருகருகே அமைந்துள்ள 9 மதுபானக் கடைகளை கற்களால் தாக்கி உடைத்தும், மதுபான பாருக்கு தீ வைத்தும் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புதுச்சேரி யூனியன் சோரியாங்குப்பத்தில் ஒரு கிலோமீட்டருக்குள் 10 தனியார் மதுபானக் கடைகள் உள்ளதால், பொதுமக்களுக்கு தொடர்ந்து இடையூறு ஏற்படுவதாக குற்றம்சாட்டப்படுகிறது. இந்நிலையில், கடலூர் – புதுவை எல்லை சோரியங்குப்பத்தில் அமைந்துள்ள மதுபானக் கடைகளுக்கு கடலூர் மக்களும் வந்து விவசாய நிலங்களில் வைத்து மது அருந்துவதாக கூறப்படுகிறது.
மேலும், புதுச்சேரியில் நெடுஞ்சாலை ஓரம் மூடப்பட்ட சுமார் 15 தனியார் மதுபானக் கடைகளை சோரியாங்குப்பத்தில் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், தங்கள் குழந்தைகளுடன் மதுக்கடைகள் அமைந்துள்ள பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது 9 மதுபானக் கடைகளை கற்களால் தாக்கியும், பெயர்ப்பலகைகளை உடைத்தும் மேற்கூரைகளை பிய்த்து எரிந்தும் பொதுமக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இந்நிலையில், அங்கு பாதுகாப்பிற்காக நின்றிருந்த போலீஸார் பொதுமக்கள் மீது லேசானை தடியடி நடத்தினர். இதனால், பொதுமக்கள் போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே, போராட்டத்தில் ஈடுபட்டவர்களுள் மர்ம நபர்கள் சிலர், அங்கிருந்த 4 மதுக்கடைகளின் மது அருந்தும் இடங்களுக்கு தீ வைத்துள்ளனர். மதுக்கடைகளின் உள்ளே மதுபாட்டில்கள் இருந்ததால் தீ வேகமாக பரவி கொளுந்துவிட்டு எரிந்தது. போலீஸார் மற்றும் தீயணைப்பு துறையினர் தீயை அணைக்க முயற்சி எடுத்து வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் இன்னும் அங்கிருந்து கலைந்து செல்லாததால் அப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவிவருகிறது.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.