24 மணி நேரமும் களைகட்டும் கள்ள மது வியாபாரம்.


உச்சநீதிமன்ற உத்தரவால் மதுக்கடைகள் இல்லா நகரானது வந்தவாசி..! ஆனால் தற்போது புதுச்சேரியில் இருந்து கடத்திவரப்படும் கலர் சாராய மதுப்பாட்டிகள் அங்கு 24 மணி நேரமும் தங்கு தடையின்றி விற்கபடுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்
வந்தவாசி பழைய பேருந்து நிலைய வாகன நிறுத்தும் இடத்தில் எந்தவித அச்சமும் இன்றி தடையில்லா மது விற்பனை நடந்து வருகிறது.
விபத்தை தடுக்க போடப்பட்ட நீதிமன்ற உத்தரவு காற்றில் பறக்கிறது என்று சொல்லும் அளவிற்கு வாகன ஓட்டுனர்கள் தேடிச்சென்று மது வாங்கிச்செல்கின்றனர்
நகருக்குள் தான் இப்படி என்றால் வந்தவாசி சேத்துப்பட்டு சாலையில் உள்ள கீழ்சாத்தமங்கலம் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் கனஜோராக கலர்சாராய விற்பனை தடையின்று நடந்து வருகிறது
வந்தவாசியில் இரவு பகலாக தொடரும் கள்ளமது விற்பனையை தடுக்க மாவட்ட காவல்துறையோ, மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல்துறையினரோ நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை..!
இவற்றுக்கெல்லாம் ஒருபடி மேலே போய் வந்தவாசி ஆரணி நெடுஞ்சாலையில் மூடப்பட்ட டாஸ்மாக் பார் ஒன்றின் உள்ளே சாவகாசமாக அமர்ந்து உற்சாகமாக மது விற்றுக்கொண்டிருந்த நபர் ஒருவர் கேமராவை பார்த்ததும் சற்று அதிர்ந்து தான் போனார்
மதுக்கடை பார் ஒன்றில் காலையில் திறக்கப்பட்ட காபிக்கடை போல மதுக்கடையை திறந்துவைத்து ஒருவர் மது விற்றுவருகிறார்.போலீசுக்கு மாமூலா என்ன கொடுக்கனுமோ அதை கொடுத்துதான் நடத்துவதாக தெரிவித்தார் அந்த பெரியவர்
குவார்ட்டர் மதுபாட்டிலுக்கு 30 ரூபாயும் பீர் பாட்டிலுக்கு 40 ரூபாயும் அதிகம் வைத்து இந்த மதுப்பாட்டில்கள் தங்குதடையின்றி விற்பனை செய்யப்பட்டுவருவதாக கூறப்படுகின்றது.
டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு என்ற போதிலும், ஏழை எளியமக்களின் நலன் பாதுகாக்கப்படும் என்று அந்தபகுதிமக்கள் வரவேற்றனர். ஆனால் அங்கு கள்ள மதுவிற்போரால் அரசின் வருவாய் மட்டுமல்ல ஏழை எளியமக்களின் பணமும் பறிக்கப்படுகின்றது என்பதை கவனத்தில் கொண்டாவது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.