'வடசென்னை' படத்துக்காக வெற்றிமாறன் என்னை தேர்வு செய்தது ஏன்? - ஐஸ்வர்யா ராஜேஷ் விளக்கம்.


'விசாரணை' படத்தைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'வடசென்னை'. தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். தனுஷ் தயாரித்து வரும் படத்தை லைகா நிறுவனம் வெளியிடவுள்ளது.
பெரிய கதை என்பதால் இரண்டு பாகங்களாக வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. 'வடசென்னை'யில் தனது கதாபாத்திரம் குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியிருப்பதாவது:
"தனது நடிகர்கள் தன்னிச்சையாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பவர் இயக்குநர் வெற்றிமாறன். நிஜ இடங்களில் படப்பிடிப்பு நடத்தவே விரும்புவார் என்பதால் அவருடன் பணியாற்றும்போது எல்லாவற்றுக்கும் தயாராக இருக்க வேண்டும். ஒரு கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டேன்.
இது எனக்கு முற்றிலும் புதிய கதாபாத்திரம். நடிப்பதற்கு ஒரு சவுகரியமான நிலை அவசியம் என நினைக்கிறேன். ஆரம்பத்தில் எனது கதாபாத்திரத்தில் ஒன்றி நடிப்பது கடினமாக இருந்தது. ஆனால், போகப் போக நான் கதாபாத்திரத்தை நன்றாக உள்வாங்கி நடித்துவிட்டேன். இது போன்ற பாத்திரத்தில் இதற்குமுன் நடித்ததில்லை.
வட சென்னையைச் சேர்ந்த, தைரியமான, துணிச்சலான பெண்ணாக நடித்துள்ளேன். சரியான சென்னை பெண் என்றால் பலர் என்னை அப்படி தொடர்புப்படுத்திக் கொள்வார்கள். அதனால்தான் வெற்றிமாறன் என்னை தேர்ந்தெடுத்தார் என நினைக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.