பல்கலை. துணைவேந்தர் நியமனத்துக்கு கல்வித்தகுதி, காலக்கெடு நிர்ணயம்: அவசரச் சட்டம் பிறப்பித்தது தமிழக அரசு.


துணைவேந்தர் நியமனத்தில் காலதாமதத்தை தவிர்க்கும் வகையில் பல்கலைக்கழக சட்டங்களை திருத்தி அவசரச்சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:
சென்னை பல்கலைக்கழகம் தவிர மற்ற 12 பல்கலைக்கழகங்களின் சட்டங்கள் திருத்தப்பட்டு அவசரச்சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னை பல்கலைக்கழக சட்டத்தை திருத்தி அவசரச் சட்டம் வெளியிட, மத்திய உள்துறை அமைச்சகம் மூலம் குடியரசுத் தலைவரின் முன்அனுமதி பெற வேண்டும். எனவே, அதுபற்றி பின்னர் வெளியிடப்படும்.
தற்போதுள்ள பல்கலைக்கழக சட்டப்பிரிவுகளில் துணைவேந்தருக்கான கல்வித்தகுதி, தேர்வுக்குழு அமைப்பதற்கான காலக்கெடு எதுவும் இல்லை. துணைவேந்தர் நியமனத்துக்கான மூவர் பட்டியலை தயாரிக்கவும், அதை ஆளுநரிடம் அளிப்பதற்கும் காலக்கெடு நியமிக்கப்படவில்லை. இந்தக் குறைகளை தீர்க்கும் வகையில் பல்கலைக்கழகங்களின் சட்டங்களில் உரிய திருத்தங்கள் கொண்டுவரப்படுகின்றன. இதுதொடர்பாக அவசரச் சட்டம் பிறப்பிக்கப்படுகிறது. இச்சட்டம் இன்று முதல் அமலுக்கு வரும்.
இந்த அவசரச் சட்டத்தில் துணைவேந்தர் பதவிக்கான கல்வித் தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் விவரங்கள் அரசிதழில் வெளியிடப்படும். துணைவேந்தர் பணியிடம் காலியாகும் தேதிக்கு 6 மாதத்துக்கு முன்பு தேர்வுக் குழுவுக்கு உறுப்பினர் நியமிக்கும் பணி தொடங்கப்படும். இக்குழு, 4 மாதங்களுக்குள் தனது பரிந்துரையை ஆளுநருக்கு சமர்ப்பிக்க வேண்டும். இல்லாவிட்டால் கூடுதல் அவகாசம் அளிப்பது அல்லது புதிய குழுவை அமைப்பது குறித்து வேந்தரான ஆளுநர் பரிசீலிக்கலாம் என்பன உள்ளிட்ட 12 திருத்தங்கள் அவசரச் சட்டத்தில் இடம் பெற்றுள்ளன.
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கான நேர்காணலில் பங்கேற்றவர்களின் தகுதி ஆளுநர் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாததால், தேர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அவசர சட்டப்படி, தேர்வுக் குழு அமைக்கப்பட்டு, 4 மாதங்களுக்குள் துணைவேந்தர் தேர்வு செய்யப்படுவார்.
இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
தொடர்ந்து நிருபர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்ததாவது:
அண்ணா பல்கலைக்கழக நேர்காணலில் பங்கேற்று ஆளுநரால் தகுதியிழப்பு செய்யப்பட்டவர்கள் யார்?
ஆளுநருக்கு அவர்கள் அளித்த பதில்கள் திருப்தி அளிக்கவில்லை என்பதுதான் உண்மை. அவர்களுக்கு தகுதியில்லை என்பதல்ல. ஐஐடியைச் சேர்ந்த எஸ்.மோகன், எபினேசர் ஜெயக்குமார் மற்றும் கருணாமூர்த்தி ஆகிய மூவரும் நேர்காணலில் பங்கேற்றனர்.
அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் பதவிக்கு பாஜக சார்பான ஒருவரை நியமிக்க முயற்சி நடப்பதாக கூறப்படுகிறதே?
அதில் உண்மையில்லை. தேர்வுக்குழு உரிய முறையில் நியமிக்கப் படுகிறது. அதன்மூலம் தான் துணை வேந்தர் நியமிக்கப்படுகிறார்.
பல்கலைக்கழக துணை வேந்தர் இல்லாத நிலையில் பட்டம் பெற்றவர்கள் நிலை என்ன?
துணைவேந்தர் இல்லாவிட்டால் பட்டங்களில் அரசு முதன்மைச் செயலர் கையொப்பமிடுவார். இந்த கையொப்பம் யாருடையது என்பதை வெளிநாட்டில் படிக்கச் செல்லும்போது அந்த நிறுவனத்தினர் உண்மை தன்மையை அறிந்து கொள்கின்றனர். இதனால் மாணவர்களுக்கும் பதிப்பில்லை. இவ்வாறு அவர் பதிலளித்தார்.
புதிய குழு அறிவிப்பு
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் தேர்வுக்குழு அளித்த பரிந்துரைகளை ஆளுநர் நிராகரித்த நிலையில், புதிய சட்டத்திருத்தத்தின் படி, அப்பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான தேடுதல் குழுவுக்கு ஆளுநர் நியமன உறுப்பினர் மற்றும் குழு தலைவராக உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஆர்.எம்.லோதா நியமிக்கப்பட்டுள்ளார்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.