டிடிவி தினகரனின் ஜாமின் மனு வரும் திங்கள் கிழமைக்கு ஒத்திவைப்பு.


தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டிடிவி தினகரன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவை டெல்லி நீதிமன்றம் திங்கள் கிழமைக்கு ஒத்தி வைத்துள்ளது.
முடக்கப்பட்ட இரட்டைஇலை சின்னத்தை பெற தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு 50 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க முயன்ற புகாரில் டி.டி.வி.தினகரன் கைது செய்யப்பட்டு, திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தினகரனுக்கு உதவியதாக, அவரது நண்பர் மல்லிகார்ஜுனாவும் கைது செய்யப்பட்டுள்ளார். இருவரையும் திங்கள் கிழமை வரை நீதிமன்றக்காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்ட நிலையில், ஜாமீன் கேட்டு இருவரது சார்பிலும் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு கடந்த 18ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது இன்றைய தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இன்று விசாரணை அதிகாரி நீதிமன்றத்துக்கு வராததால் ஜாமின் கோரிய மனுமீதான விசாரணை திங்கள் கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.