கொடுத்த கடனை திருப்பிக் கேட்டதால் உறவினர் வெறிச் செயல் – தாய், மகன் கொடூர கொலை.


திருச்சி மாவட்டம் மன்னச்சநல்லூர் அருகே, கொடுத்த கடனை திருப்பி கேட்டதால் தாய், மகனை அடித்துக் கொடூரமாக கொலை செய்து, பின்னர் சடலங்களின் மேல் டிராக்டர் ஏற்றி நசுக்கிவிட்டு தப்பியோடிய கொலையாளியை போலீஸார் தேடி வருகின்றனர்.
வெங்கடாசலபுரம் கிராமத்தை சேர்ந்த ராமசாமி என்பவர், தனது தங்கை தனபாப்புவிடம் கடந்த 2 வருடங்களுக்கு முன் 10 லட்ச ரூபாய்க்கும் மேல் கடன் பெற்றுள்ளார். தனது அண்ணன் கேட்டார் என்பதற்காக தனபாப்பு, பெரும் தொகையினை வெளிநபர்களிடமிருந்து கடனாக வாங்கி கொடுத்துள்ளார். இந்நிலையில், ராமசாமி கடன்தொல்லை தாங்காமல் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. தந்தை உயிரிழந்ததால் அவரது மகன் ராஜகோபால் என்பவர், மனநிலை பாதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று பின்னர் குணமடைந்ததாகவும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில், தனபாப்பு தன் அண்ணனுக்காக வாங்கிய கடனை மற்றவர்கள் திரும்பி கேட்கவே, அவர் தனது அண்ணன் மகன் ராஜகோபாலிடம் கொடுத்த கடனை கேட்டுள்ளார். இதனால், ராஜகோபால் கடந்த சில நாட்களாக தனபாப்புவிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்று வீட்டில் தனபாப்பு, மற்றும் அவரது மகன் சத்தியமூர்த்தி ஆகிய இருவரும் உறங்கிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த ராஜகோபால் இருவரையும் இரும்பால் தலையில் அடித்துக் கொலை செய்துள்ளார்.
கொலை செய்தும் ஆத்திரம் பொறுக்காமல், சடலங்களை வீட்டிற்கு வெளியே கொண்டுவந்து போட்டு தனது டிராக்டர் மூலம் மீண்டும் ஏற்றி நசுக்கியுள்ளார். பின்னர், தனது டிராக்டரை அங்கேயே விட்டுவிட்டு ராஜகோபால் தப்பியோடியுள்ளார். தகவலறிந்த போலீஸார் இருவரது சடலங்களையும் மீட்டனர். லால்குடி காவல்நிலைய ஆய்வாளர் தினேஷ்குமார் தலைமையில் தனிப்படை போலீஸார் கொலையாளியை தேடி வருகின்றனர். கொலையான சத்தியமூர்த்தி, ஈரோடு மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.