மக்களின் முக்கிய பிரச்னைகளில் தமிழக அரசு அக்கறையின்றி செயல்படுகிறது: விஜயகாந்த்.


மக்கள் பிரச்னைகளில் தமிழக அரசு கவனக்குறைவாக நடந்து கொள்வதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் "கள்ளச்சாராயம் காய்ச்சுவதை காவல்துறையே ஊக்குவித்து பாதுகாப்பு வழங்குகிறது. உதாரணமாக திருவண்ணாமலை, வந்தசாசி போன்ற பகுதியில் நடக்கிறது. சென்னை போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்தும் காவல்துறையினரின் சீருடையை பார்த்து பலகாலம் ஆகிவிட்டது.
பெருவாரியான சிக்னலில் போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்துவதில்லை, உதாரணமாக கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் காவல்துறையினர் இல்லை என்கிற நிலையுள்ளது. இதையும் தேமுதிக கண்டிக்கிறது.
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்து நடத்தக்கூடிய பொறியியல் கல்லூரிகளுக்கு, தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு வழங்க வேண்டிய இலவச கல்விக்கான தொகை 14,000/- கோடி ரூபாய் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு, தமிழக அரசுக்கு கல்விக்கான இலவச நிதியை வழங்கியும், தமிழக அரசு நிலுவையில் வைத்திருப்பதால், பொறியியல் கல்லூரிகளில் படிக்கக்கூடிய தாழ்த்தப்பட்ட மாணவர்களும், கல்லூரிகளும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழக அரசு பொறியியல் கல்லூரிகளுக்கு இலவச கல்விக்கான நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கவேண்டும் என தேமுதிக சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் பல் மருத்துவர்களுக்கான மாணவர்கள் சேர்ப்பு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றபொழுது ஏற்பட்ட குளறுபடியினால், மாணவரகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் கலந்தாய்வு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இனியாவது தமிழகத்தில் உள்ள அனைத்து துறைகளிலும் கவனம் செலுத்தி, மக்கள் பிரச்சனையை உடனடியாக தீர்க்க நடவடிக்கை வேண்டும் எனக் கேட்டுக்கொள்வதாக விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.