போராட்டம் வாபஸ் பெறப்பட்டதால் பணிக்குத் திரும்பினர் போக்குவரத்து ஊழியர்கள்.


ஊதிய உயர்வு, ஓய்வுதிய நிலுவை உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொமுச, சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யூ.சி. உள்ளிட்ட 10 போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் நேற்று முன்தினம் முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
தொழிற்சங்கத்தினர் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு ஏற்பட்டதை அடுத்து, அரசு போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள் இன்று அதிகாலை முதல் பேருந்துகளை வழக்கம் போல் இயக்கி வருகின்றனர்.சென்னை பல்லவன் இல்லம் அருகே பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சென்னை மாநகரப் பேருந்துகள் அதிகாலையிலேயே புறப்பட்டன. அங்கிருந்து, பேருந்துநிலையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்ட பேருந்துகள், நகரின் பல்வேறு பகுதிகளுக்கு புறப்பட்டுச் சென்றன.
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அதிகாலையிலேயே பயணிகள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது. நகரின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லவேண்டிய பேருந்துகள் அடுத்தடுத்து வந்ததால், பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு புறப்பட்டுச் சென்றனர்.
திருவண்ணாமலையில் இருந்து சென்னை, வந்தவாசி, வேலூர் உள்ளிட்ட இடங்களுக்கு உடனடியாகப் பேருந்துகள் புறப்பட்டன. கடந்த இரண்டு நாட்களாக பேருந்துகள் இயங்காததால், திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் குறைவாகவே இருந்தது. சென்னைக்கு புறப்பட்ட பேருந்துகளில் சில பயணிகள் மட்டுமே இருந்தனர்.
இதேபோன்று, திருப்பூரில் இரவே பணிக்குத் திரும்பிய போக்குவரத்து ஊழியர்கள் ஈரோடு, கோவை, சென்னை உள்ளிட்ட இடங்களுக்கு பேருந்துகளை எடுத்துச் சென்றனர். போராட்டம் திடீர் வாபஸ் காரணமாக பயணிகள் வருகை குறைவாகவே இருந்தது.இதனிடையே, உடுமலையில் இருந்து தாராபுரம் நோக்கிச் சென்ற தனியார் பேருந்துமீது மர்ம நபர்கள் கல்வீசித் தாக்குதல் நடத்தியதில் கண்ணாடி உடைந்தது.
தருமபுரியில் இருந்து அரூரை நோக்கிச் சென்ற அரசுப் புறநகர்ப் பேருந்துமீதும் மர்ம நபர்கள் கற்களை வீசினர். இதில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்தபோதும், ஓட்டுநர் காயமின்றி தப்பினார்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.