1,040 ஆண்டுகள் பழமையான சோழர் காலத்து சிலை ஆஸ்திரேலியாவில் மீட்பு.விருத்தாச்சலத்தில் இருந்து திருடப்பட்ட 1,040 ஆண்டுகள் பழமையான சோழர் காலத்து சிலை ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்டது.
இதுகுறித்து பொருளாதார குற்றப்பிரிவு கூடுதல் டிஜிபி பிரதீப் வி.பிலிப், ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் ஆகியோர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
விருத்தாச்சலம் விருதகிரீஸ்வரர் கோயிலில் இருந்து 2002-ல் அமெரிக்கா வழியாக ஆஸ்திரேலியாவுக்கு கடத்தப்பட்ட ‘நரசிம்மி’ சிலையை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் மீட்டுள்ளனர். இந்த சிலை 1,040 ஆண்டுகளுக்கு முந்தைய சோழர்காலத்து சிலையாகும். இதன் மதிப்பு ரூ.1 கோடியே 49 லட்சமாகும்.
210 கிலோ எடையுள்ள இந்த சிலையுடன் கடத்தப்பட்ட மேலும் 4 சிலைகளை ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து சிலைகளும் கடல்வழியாக சிலை கடத்தல் மன்னன் விக்ரம்கபூர் மற்றும் அவரது கூட்டாளிகளால் கடத்தப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு பழமையான வரலாறு உண்டு. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் வரலாற்றுக்கு மதிப்பு அதிகம். இங்குள்ள மக்களுக்கு பழமையான சிலையின் மதிப்பு தெரியவில்லை. உலக சந்தையில் ஆயுதம் மற்றும் போதை பொருளுக்கு அடுத்ததாக கலைநயம் மிக்க சிலைகளுக்கு அதிக மதிப்பு உள்ளது. இதனால், சிலைகள் கடத்தப்படுகின்றன. இதைத் தடுக்க தமிழக கோயில் சிலைகளை ஆவணப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூரின் வெளிநாட்டில் உள்ள அனைத்து சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.