வாகன சோதனையில் தப்ப முயன்ற இளைஞர் மின்கம்பத்தில் மோதி உயிரிழப்பு.திருப்பூர் மாவட்டம் சென்னிமலைபாளையம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தவர் சுரேஷ். பனியன் தொழிலாளியான இவர், நேற்றிரவு தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தபோது, வீரபாண்டி பிரிவில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, சுரேஷ் நிற்காமல் வாகனத்தை ஓட்டிச் சென்றதால் போலீசார் தங்களின் வாகனத்தில் அவரை துரத்தி சென்றதாகக் கூறப்படுகிறது. அப்போது வாகனத்தை வேகமாக ஓட்டிச் சென்ற சுரேஷ், சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து சென்ற உறவினர்கள், சுரேஷின் சடலத்தை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்ததும் மாநகர போலீசார் விரைந்து வந்து போராட்டக்காரர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் காரணமாக இரவு முழுவதும் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.