சுரங்க மெட்ரோ ரயிலில் பயணிக்க 1.23 லட்சம் ஸ்மார்ட் அட்டைகள் விற்பனை.


சென்னை திருமங்கலம் – நேரு பூங்கா சுரங்கப்பாதை மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய 1.23 லட்சம் ஸ்மார்ட் கார்டுகள் விற்பனையாகியுள்ளன. சுற்றுலா பயணிகள், மாணவர்களுக்கான பயணச் சீட்டுகளையும் மெட்ரோ ரயில் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''சென்னை திருமங்கலம் - நேரு பூங்கா இடையே சுரங்கப்பாதையில் மெட்ரோ ரயில்சேவை கடந்த 14-ம் தேதி தொடங்கப்பட்டது. சேவை தொடங்கி 10 நாட்கள் ஆகியுள்ள நிலையில், இந்த ரயிலில் இதுவரை 2 லட்சத்து 82 ஆயிரத்து 621 பேர் பயணம் செய்துள்ளனர். 1 லட்சத்து 23 ஆயிரத்து 827 ஸ்மார்ட் கார்டுகள் விற்பனை ஆகியுள்ளன.
நேரு பூங்கா – பரங்கிமலை இடையே பயணம் செய்ய ரூ.45, நேரு பூங்கா - விமான நிலையம் இடையே பயணம் செய்ய ரூ.54 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஒரு குழுவாகப் பயணம் செய்தால் அவர்களுக்கு குழு பயணச் சீட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 10 சதவீத தள்ளுபடி விலையில் இந்தச் சீட்டு வழங்கப்படும். சுற்றுலா பயணிகளைக் கவர்வதற்காக சுற்றுலா பயணச் சீட்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ரூ.150 மதிப்புள்ள இந்தப் பயணச் சீட்டைப் பயன்படுத்தி ஒருநாள் முழுவதும் எத்தனை முறை வேண்டுமானாலும் மெட்ரோ ரயிலில் பயணம் செய்யலாம். இந்தப் பயணச்சீட்டை வாங்கிய 30 நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.