காணாமல் போனதாகக் கருதப்பட்ட போர் விமானம் விபத்தில் சிக்கியது.


காணாமல் போனதாகக் கருதப்பட்ட சுகோய் 30 ரக போர் விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விபத்துக்குள்ளானது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விபத்துக்கு முன்பே இரு விமானிகளும் விமானத்தில் இருந்து பாதுகாப்பாக வெளியேறியதால் உயிர்தப்பினர்.
இந்திய விமானப் படைக்குச் சொந்தமான சுகோய் 30 ரகத்தைச் சேர்ந்த போர் விமானம், வழக்கமான பயிற்சியில் ஈடுபடுவதற்காக அஸ்ஸாம் மாநிலம் தேஸ்பூரில் இருந்து இரண்டு விமானிகளுடன் நண்பகல் பன்னிரண்டேகால் மணிக்குப் புறப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்தில் திடீரென தனது ரேடார் கட்டுப்பாட்டில் இருந்து காணாமல் போனது. அதன் பிறகு விமானத்தின் ரேடியோ தகவல்களும் கிடைக்கப்பெறவில்லை.
விமானத்தைத் தேடும் பணியில் இந்திய விமானப்படை தீவிரமாக ஈடுபட்டிருந்தது. இந்நிலையில், விமானம் தேஸ்பூரில் இருந்து 36 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள அடர்ந்த வனப் பகுதியில் நண்பகல் பன்னிரண்டரை மணிக்கு விழுந்து விபத்துக்கு உள்ளானது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விமானத்தில் தொழில் நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் அதிலிருந்த விமானிகள் இருவரும் பாதுகாப்பாக வெளியே குதித்து உயிர் தப்பியுள்ளனர்.
எனினும், விபத்துக்குள்ளான விமானத்தின் பாகங்கள் மேலே விழுந்ததால் பொதுமக்கள் மூன்று பேர் காயமடைந்துள்ளனர். விபத்து குறித்த விசாரணைக்கு உத்தரவிடுமாறு இந்திய விமானப்படை கோரியுள்ளது. கடந்த 15 ஆண்டுகளில் இதுபோல் ஆறு போர் விமானங்கள் விபத்துக்கு உள்ளாகி இருப்பதாக ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.