மாயமான சுகோய் போர் விமானத்தின் பாகங்கள் கண்டெடுப்பு.


இந்திய – சீன எல்லையில் பறந்து கொண்டிருந்த போது மாயமான இந்திய விமானப்படைக்குச் சொந்தமான சுகோய் – 30 ரக விமானத்தின் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
அசாம் மாநிலம் தேஜ்பூர் விமானப்படை தளத்தில் இருந்து 2 விமானிகளுடன் கடந்த செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணிக்கு புறப்பட்டது சுகோய்–30 ரக போர்விமானம். விமானிகள் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.
தேஜ்பூரில் இருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் பறந்தபோது, திடீரென ரேடாரின் தொடர்பை விமானம் இழந்தது. ரேடாரின் தொடர்பை இழந்த இடம் ஏற்கனவே சர்ச்சைக்கு உள்ளான சீன எல்லைக்கு ஒட்டிய பகுதியாகும்.
இதனால், மாயமான விமானம் விபத்தில் சிக்கியதா? அல்லது வேறு ஏதும் காரணமாக தரை இறக்கப்பட்டு உள்ளதா? இல்லை சீனப் படைகளால் திசை திருப்பபட்டதா போன்ற கேள்விகள் எழுந்தது. விமானப்படையினர் விமானத்தை தேடும் பணியில் கடந்த இரு தினங்களாக ஈடுபட்டனர். இந்த நிலையில், இரண்டு நாட்களுக்கு பிறகு விமானத்தின் பாகங்கள் சீன எல்லை அருகே இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளன.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.