இலங்கையில் வரலாறு காணாத பெருவெள்ளம்: நிவாரண பொருட்களுடன் கொழும்பு சென்றது இந்திய கப்பல்.


கனமழை, பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு உதவுவதற்காக உணவு, மருந்து உள்ளிட்ட நிவாரண பொருட்களுடன் இந்திய போர்க்கப்பல் நேற்று கொழும்பு சென்றடைந்தது. மேலும் 2 இந்திய கப்பல்கள் நிவாரண பொருட்களுடன் கொழும்பு விரைந்துள்ளன.
இலங்கையின் தென்பகுதியில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. அங்கு பெய்யும் கனமழையால் இதுவரை 119 பேர் உயிரிழந்துள்ளனர். 150 பேரை காணவில்லை. 230 பேர் காயமடைந்துள்ளனர். 5 லட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.
தென் இலங்கையின் மாத்தறை, காலி, களுத்துறை, கேகாலை, ரத்தினபுரி, அம்பாந்தோட்டை, கம்பகா, கொழும்பு ஆகிய 8 மாவட்டங்கள் தண்ணீரில் மூழ்கி யுள்ளன. இந்த மாவட்டங்களில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. கொழும்பில் உள்ள இலங்கை நாடாளுமன்றத்தை தண்ணீர் சூழ்ந்துள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் முப்படைவீரர்கள் இரவு பகலாக மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்திருப்பதால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா நேற்றுமுன்தினம் இரவு அவசரமாக நாடு திரும்பினார்.
இந்தியா உதவி
கடந்த 2003-ல் இலங்கையில் இதுபோன்ற கனமழை, பெருவெள்ளம் ஏற்பட்டது. 14 ஆண்டுகளுக்குப் பிறகு அங்கு மழையால் மீண்டும் பேரழிவு ஏற்பட்டிருக்கிறது. பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு உதவுவதற்காக ஐஎன்எஸ் கிர்ச் போர்க்கப்பல் உணவு, மருந்து உள்ளிட்ட நிவாரண பொருட்களுடன் நேற்று கொழும்பு சென்றடைந்தது.
இதைத் தொடர்ந்து ஐஎன்எஸ் ஷார்டல், ஐஎன்எஸ் ஜலஸ்வா ஆகிய போர்க்கப்பல்களும் நிவாரண பொருட்களும் கொழும்பு விரைந்துள்ளன. அவை இன்று கொழும்புக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2004-ல் சுனாமி தாக்கிய போது இலங்கைக்கு முதலில் உதவிக்கரம் நீட்டியது இந்தியா. அதேபோல இப்போதைய மழையிலும் இலங்கைக்கு முதல் நாடாக இந்தியா உதவிகளை வழங்கியுள்ளது என்று அந்தநாட்டு வெளியுறவு அமைச்சகம் பாராட்டு தெரிவித்துள்ளது.
Labels:

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.