இலங்கையில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.


இலங்கையில் பெய்த கடும் மழையால், வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டதில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பாதிக்கப்பட்டோருக்கு உதவ நிவாரணப் பொருட்களுடன் இரண்டு கப்பல்கள் அனுப்பப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இலங்கையின் தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக இடைவிடாத மழை பெய்து வருகிறது. இதனால் ரத்தினபுரி, களுத்துறை, கேகாலை, காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஆறுகளில் வெள்ளம் அபாய கட்டத்தைத் தாண்டி ஓடுவதுடன் அணைகளும் நிரம்பி வழிகின்றன. நூற்றுக்கணக்கான கிராமங்களில் உள்ள வீடுகள் மற்றும் நிலங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதால் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. மக்கள் கழுத்தளவு நீரில் நடந்து சென்று பாதுகாப்பான இடங்களை நோக்கி செல்கின்றனர். வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் 6 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டோரை மீட்கவும், நிவாரணம் வழங்கவும் ராணுவத்தின் முப்படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வெள்ளத்தில் சிக்கித் தவிப்பவர்கள் படகுகள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டு வருகின்றனர். மழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை100ஐக் கடந்துள்ளது. மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோரைக் காணவில்லை என்பதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். நிவாரணப் பொருட்களுடன் இலங்கைக்கு இரண்டு கப்பல்கள் அனுப்பப்படுவதாகவும், முதல் கப்பல் இன்று காலையும், மற்றொன்று நாளையும் கொழும்பு துறைமுகத்தைச் சென்றடையும் என்று பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.