திண்டுக்கல் வெங்காய மார்க்கெட்டில் சின்ன வெங்காயத்தின் விலை உயர்வு.


வரத்து குறைவு காரணமாக திண்டுக்கல் வெங்காய சந்தையில் சின்ன வெங்காயத்தின் விலை கிலோ 110 ருபாய் வரை உயர்ந்துள்ளது. திண்டுக்கல் தாடிக்கொம்பு சாலையில் 100க்கும் மேற்பட்ட வெங்காய மண்டிகள் செயல்பட்டு வருகிறது. வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே நடைபெறும் வெங்காய சந்தையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் வெங்காயம் கொண்டு வரப்படுகிறது.
இங்கு சராசரியாக நாள் ஒன்றுக்கு 4 ஆயிரம் மூட்டைகள் சின்ன வெங்காயம் விற்பனைக்கு கொண்டு வரப்படும் நிலையில் தற்போது, 2 ஆயிரம் மூட்டைகளாக வரத்து குறைந்துள்ளது. இதனால் வெங்காயத்தின் விலையும் படிப்படியாக உயர்ந்து முதல் ரக வெங்காயம் கிலோ ரூபாய் 100 முதல் ரூபாய் 110 வரை விற்பனை செய்யப்படுகிறது.

வறட்சி மற்றும் சாகுபடி பரப்பளவு குறைவு ஆகியவற்றின் காரணமாக விலை உயர்ந்துள்ளது என்றாலும், கர்நாடகா, ஆந்திரா மாநில வியாபாரிகள் அதிகளவில் வெங்காயத்தை விதைக்காக அதிக அளவில் கொள்முதல் செய்ததும் விலை உயர்வுக்கு காரணம் எனக் கூறப்படுகிறது. இதே நிலை தொடர்ந்தால் வெங்காயத்தின் விலை மேலும் அதிகரித்து உச்சத்தை எட்டும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.