2 ஆண்டுகளில் அனைவருக்கும் சேட்டிலைட் போன் சேவை வழங்க பிஎஸ்என்எல் திட்டம்.


அடுத்த 2 ஆண்டுகளில் அனைவருக்கும் சேட்டிலைட் போன்சேவையை வழங்க பி.எஸ்.என்.எல். நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இன்மார்சட் வரிசையில் 14 செயற்கைக்கோள்கள் மூலம் இந்த சேவையை பி.எஸ்.என்.எல்., வழங்க உள்ளது. முதல்கட்டமாக எல்லை பாதுகாப்பு படை, ரயில்வே, காவல் உள்ளிட்ட அரசுத்துறைகளின் பயன்பாடுகளுக்கு சேட்டிலைட் போன்சேவை வழங்கப்படும். இதன் பின்னர் படிப்படியாக பொதுமக்கள் பயன்பாட்டுக்கும் இந்தசேவை அளிக்கப்பட உள்ளது. புவியிலிருந்து 35,700 கிலோ மீட்டர் உயரத்தில் சுற்றுவட்டப்பாதையில் உள்ள செயற்கைக்கோள்கள் மூலம் நேரடியாக தொடர்பு கொள்வதால், கப்பல், விமானம் உள்ளிட்ட நாட்டின் எந்தப்பகுதியில் இருந்தாலும் சேட்டிலைட் போன் சேவையை பயன்படுத்த முடியும்.
முதல்கட்டமாக 46 ஆயிரம் இணைப்புகள் மட்டுமே வழங்கப்பட உள்ளதாகவும், அழைப்புக் கட்டணம் நிமிடத்துக்கு 30 ரூபாய் முதல் 35 ரூபாய் வரை நிர்ணயிக்கப்படலாம் என்றும் பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.