தனியார் நிறுவனங்கள் சார்பில் மே 26-ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்: சென்னை மாவட்ட ஆட்சியர் தகவல்.


வேலையில்லாத பட்டதாரிகளுக்கு தனியார் நிறுவனங்கள் சார்பில் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை ( மே 26-ம் தேதி) சாந்தோமில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடத்தப்படவுள்ளது. இதில் 250 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது என சென்னை மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''சென்னை சாந்தோமில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மே 26-ம் தேதி காலை 11 மணிக்கு தனியார் நிறுவனம் சார்பில் வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்படவுள்ளது. இதில் சுமார் 250 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.
எனவே பல்வேறு கல்வித் தகுதிகளுடன் அரசு வேலைக்காக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கும் பட்டதாரிகள் இதில் பங்கேற்கலாம். இந்த முகாமில் 19 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட ஆண்கள், பெண்கள் தங்களது கல்விச் சான்றிதழ்களுடன் நேரில் பங்கேற்று பயன்பெறலாம்'' என்று அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.