பிஎப் பங்களிப்பு தொகையை 10 சதவீதமாக குறைக்க திட்டம்?.


நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்கள் தங்களது சம்பளத்தொகையில் 12 சதவீதத்தை வருங்கால வைப்பு நிதி (பிஎப்) செலுத்த வேண்டும். பணியாளர்கள் செலுத்தும் 12 சதவீதம் அளவுக்கு நிறுவனங்களும் பங்களிப்பு அளிக்க வேண்டும். தற்போது இந்த அளவை 10 சதவீதமாக குறைக்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருகின்றன.
பிஎப் அறங்காவலர் கூட்டம் இன்று பூனேவில் நடக்க இருக்கிறது. இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டிய திட்டத்தில் பங்களிப்பு தொகை குறைப்பும் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பங்களிப்பு தொகையை குறைக்குமாறு பல தரப்பில் இருந்து தொழிலாளர் நலத்துறை அமைச்சகத்துக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. இந்தத் தொகையை குறைப்பதன் மூலம் பணியாளர்கள்வசம் கூடுதல் சம்பளத்தொகை வரும், இதனால் பணியாளர்கள் செலவழிக்க முடியும், நிறுவனங்களின் பங்களிப்பும் குறையும், மொத்தமாக பொருளாதாரத்தில் மாற்றங்கள் வரும் என பரிந்துரைகள் சென்றிருப்பதாக தகவல்கள் வெளியாகிஉள்ளன.
இருந்தாலும் இந்த பரிந்துரைக்கு தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவிக்க முடிவு செய்திருக்கின்றன. இந்த பரிந்துரை பணியாளர்களின் சமூக பாதுகாப்பு திட்டத்தை நீர்த்துபோகசெய்யும் என சங்கங்கள் தெரிவித்திருக்கின்றன.
பாரதிய மஸ்தூர் சங்கத்தின் தலைவர் பி.ஜே.பனசூர் (Banasure), கூறும் போது இந்த பரிந்துரையை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம், பணியாளர்களின் நலனுக்காக இந்த பரிந்துரை கொண்டுவரப்படவில்லை என்றார்.
இந்த நடவடிக்கையால் பணியாளர்கள் நலன் 4 சதவீதம் அளவுக்கு குறையும் என ஏஐடியூசி செயலாளர் டிஎல் சச்தேவ் கூறினார். பணியாளர்கள் மற்றும் நிறுவனங்கள் இணைந்து அடிப்படை சம்பளத்தில் 24 சதவீதம் வருங்கால வைப்பு நிதியில் வரவு வைக்கிறது. ஒருவேளை தற்போதைய விதியில் மாற்றம் செய்யப்படும் பட்சத்தில் இந்த தொகை 20 சதவீதமாக குறையும்.
இதுதவிர காப்பீட்டுக்காக (இடிஎல்ஐ) 0.50 சதவீத தொகை நிறுவனங்கள் செலவழிக்கின்றன.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.