பேமென்ட் வங்கியைத் தொடங்கியது பேடிஎம் நிறுவனம்.


பேடிஎம் நிறுவனம் பேமென்ட் வங்கி தொடங்குவதற்கு முழுமையான அனுமதியை ரிசர்வ் வங்கி வழங்கியதையடுத்து பேமென்ட் வங்கியை அந்நிறுவனம் இன்று முறைப்படி தொடங்கியது.
முதலீடுகள் மீது கேஷ்பேக் சலுகைகளை அறிவித்துள்ளது. அதேபோல் ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் ஏதுமில்லை எனத் தெரிவித்துள்ளது. மேலும், பேடிஎம் பேமெண்ட் வங்கிக்காக ஆரம்ப கட்ட முதலீடாக ரூ.400 கோடி செலவு செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
2020-ம் ஆண்டில் 500 மில்லியன் வாடிக்கையாளர்களைப் பெற வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு வங்கி சேவையைத் தொடங்கியிருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏர்டெல், இந்தியா போஸ்ட் அமைப்புகளைத் தொடர்ந்து பேடிஎம் பேமென்ட் வங்கி சேவையைத் தொடங்கியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
வங்கி சேவை தொடங்கப்பட்டது குறித்து பேடிஎம் பேமென்ட் வங்கியின் நிர்வாக இயக்குநர் விஜய்சங்கர் சர்மா வெளியிட்டுள்ள அறிக்கையில், "ரிசர்வ் வங்கி புதியதொரு வங்கி முறையை செயல்படுத்துவதற்கான அனுமதியை எங்களுக்கு அளித்துள்ளது. வாடிக்கையாளர்களின் முதலீடு அரசு பத்திரங்களில் மிகவும் பாதுகாப்பாக முதலீடு செய்யப்படும். தேசத்தின் பொருளாதாரத்தை வளர்த்தெடுப்பதில் எங்கள் பங்களிப்பு இருக்கும் என்பதில் பெருமிதம் கொள்கிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
பேமென்ட் வங்கியால் என்ன பயன்?
ஓட்டலில் சாப்பிட்ட உணவுக்கு கையிலிருந்து பணம் கொடுப்போம். அல்லது கிரெடிட், டெபிட் கார்டு மூலம் பணத்தைக் கொடுப்போம். ஆனால் வங்கி கணக்கு எண்ணைக் கொடுத்து பணத்தை எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னால் எப்படி இருக்கும். மின்னணு பரிவர்த்தனைகளின் அடுத்த கட்டமாக இந்த வசதியை அளிக்க உள்ளது பேமென்ட் வங்கிகள். டெபிட் கார்டு/ கிரெடிட் கார்டு, மொபைல் வாலட், நெட்பேங்கிங், போன் பேங்கிங் போன்ற மின்னணு முறைகளைத் தாண்டி, அதற்கும் மேலான வசதிகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதே பேமென்ட் வங்கி நிறுவனங்களின் நோக்கம்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.