சுகாதாரமற்ற முறையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த கோழி இறைச்சி பறிமுதல்.


சென்னை புதுப்பேட்டையில் சுகாதாரமற்ற முறையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 150 கிலோ கோழி இறைச்சியை உணவுப்பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
புதுப்பேட்டை வேலாயுதம்தெரு பகுதியில் உள்ள கோழி இறைச்சி மொத்த விற்பனைக் கடைகளுக்கு வெளிமாவட்டங்களில் இருந்து கோழிகள் கொண்டு வரப்பட்டு, பின்னர் அவற்றின் இறைச்சி இங்கிருந்து சில்லரை வியாபார கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. ஆனால் வரும் வழியில் சில கோழிகள் இறந்து விடுவதாகவும் அவற்றின் இறைச்சியை இங்கு விற்பனை செய்வதாகவும் மாவட்ட ஆட்சியருக்கு புகார் சென்றது.
இதன் அடிப்படையில் இன்று புதுப்பேட்டையில் உள்ள 30க்கும் மேற்பட்ட இறைச்சி கடைகளை சோதனை செய்த உணவுப்பாதுகாப்பு அதிகாரிகள், சுகாதாரமற்ற முறையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 150 கிலோ இறைச்சியை பறிமுதல் செய்தனர். இது தொடர்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்தனர்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.