5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ளவர்களின் விவசாய கடனை தள்ளுபடி செய்ய முடியாது – செல்லூர் ராஜு.


5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருக்கும் பெரிய விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய முடியாது என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள குளிர்பதன கிடங்கு 2 கோடியே 15 லட்ச ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட உள்ளது. இதுகுறித்து ஆய்வு மேற்கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, தமிழ்நாடு கூட்டுறவு இணையத்தின் கீழ் செயல்படும்படும் குளிர்பதனக் கிடங்கில், 12 அடுக்குகளில் காய்கறி, பழங்கள், பூக்களை பாதுக்காத்து வைத்து கொள்ள முடியும் என்றார்.
குளிரூட்டியால் வழங்கப்படும் குளிர்ச்சியை, அறைகள் தக்க வைத்து கொள்ள வசதியாக சுவர்களில் தெர்மாகோல் மூலம் ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும் 15 கூட்டுறவு பெட்ரோல் பங்க்குகள் திறப்பதற்கு இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் செல்லூர் ராஜூ கூறினார். உர வினியோகம் தங்கு தடையின்றி நடைபெற்று வருகிறது என்றும், 2006ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை, 5 ஆயிரத்து 318 கோடி ரூபாய் விவசாயக் கடன் தள்ளுப்படி செய்யப்பட்டுள்ளது என்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் தெரிவித்தார்.
கூட்டுறவு துறையில் விவசாயகடன் தொடர்பான பிரச்சனை ஏதும் எழவில்லை என்றும், தேர்தல் வாக்குறுதிபடி சிறு-குறு விவசாயிகள் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு கடன் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும் செல்லூர் ராஜூ கூறினார். ஆட்சி நிர்வாகம் பற்றி குற்றம்சாட்டும் ஓ.பி.எஸ்., எந்ததுறை பின்தங்கி உள்ளது என்பதை குறிப்பிட்டும் சொன்னால், தேக்கநிலையை அறிந்து சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.