ஜிஎஸ்டி வரி விதிப்பில் மறுபரிசீலனை கிடையாது: சிபிஇசி தலைவர் திட்டவட்டம்.


சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விதிப்பில் மாற்றம் செய்வதோ அதை மறுபரிசீலனை செய்வதோ சாத்தியம் இல்லை என்று மத்திய உற்பத்தி மற்றும் சுங்கத்துறை வாரியத்தின் (சிபிஇசி) தலைவர் வனஜா சர்னா திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
மத்திய அரசு திட்டமிட்டபடி ஜூலை 1 முதல் ஜிஎஸ்டி முறையை அமலாக்க உள்ளது. அதற்குஏற்ப தொழில்துறையினர் தங்களைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.
ஜிஎஸ்டி வரி விதிப்பில் மாற்றம் செய்ய வேண்டும் என்று தொழில்துறையில் பலபிரிவினரும் மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக அதிகம் விற்பனையாகும் நுகர்பொருள் துறை (எப்எம்சிஜி), ஆட்டோமொபைல், ரயில்வே மற்றும் சூரிய மின்னுற்பத்தி பொருள் தயாரிப்பு துறையினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
வரிவிதிப்பை உறுதி செய்வதற்கான ஜிஎஸ்டி கவுன்சிலின் கடைசி கூட்டத்தில் மொத்தம் 1,211 பொருள்கள் மற்றும் 500 வகையான சேவைகள் ஆகியவற்றுக்கு வரி அளவுகள் இறுதி செய்யப்பட்டன. இறுதி செய்யப்பட்ட பொருள்களில் 60 சதவீதபொருள்கள் 12 சதவீதம் மற்றும் 18 சதவீத வரம்புக்குள் வந்துள்ளன.
இறுதி செய்யப்பட்ட பிறகு அதை மறுபரிசீலனை செய்ய முடியாது என்பதை தொழில்துறையினர் உணர வேண்டும். இவற்றில் எஞ்சிய 6 அல்லது 7 பொருள்களுக்குத்தான் இன்னமும் வரிவிகிதம் குறித்து முடிவு செய்ய வேண்டியுள்ளது என்று அவர் கூறினார்.
வரி விகிதத்தில் மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளுக்கு முடிவே கிடையாது. முதலில் ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை அமலுக்கு வரட்டும். பின்னர் கோரிக்கைகள் குறித்து படிப்படியாக பரிசீலிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பட்ஜெட் தாக்கலுக்குப் பிறகு வரிவிகிதங்கள் எப்படி மாற்றம் செய்யப்படுகின்றனவோ அதைப்போல தற்போது விதிக்கப்பட்ட வரி விகிதங்கள் பின்னர் மாற்றப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஜிஎஸ்டி கவுன்சிலானது பொதுமக்கள், வர்த்தகம், தொழில்துறை, அரசின் வரி வருமானம் ஆகிய அனைத்தையும் கருத்தில் கொண்டே வரி விகிதங்களை இறுதி செய்துள்ளது. இருப்பினும் சில பொருள்கள் மீதான வரி விதிப்பை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முற்றிலுமாக நிராகரித்து விட முடியாது. ஜூன் 3-ம் தேதி நடைபெற உள்ள கூட்டத்தில் இப்பொருள்களுக்கான வரிவிதிப்பு இறுதி செய்யப்படும் என்றும் சர்னா கூறினார்.
ஜிஎஸ்டி கவுன்சில் உறுப்பினர்கள் இது தொடர்பாக தங்களது ஆட்சேபத்தை பதிவு செய்வதை தடுக்க முடியாது. அவரது கோரிக்கையில் நியாயம் இருப்பின் அது குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஆட்டோமொபைல் துறையினர் ஹைபிரிட்கார்களுக்கான 43 சதவீத வரி விதிப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது 30.3 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது.
எப்எம்சிஜி துறையினர் ஜாம் மற்றும் ஊறுகாய்களுக்கு 12 சதவீத வரி விதிக்கலாம் என்று கோரியுள்ளனர். தற்போது இவை 18 சதவீத வரி வரம்பில் உள்ளன. வரி உயர்வினால் சிறு, குறுந்தொழில்கள் பாதிக்கப்படும் என இத்துறையினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஜிஎஸ்டி அமலாக்கத்துக்கு இன்னும் 4 வாரங்களே உள்ளதால் அனைத்துப் பகுதிகளுக்கும் உரிய அதிகாரிகளை பணியமர்த்துவதற்காக 150 அதிகாரிகளுக்கு பணியிட மாற்ற உத்தரவில் கவனம் செலுத்தி வருகிறார் சர்னா.
தொழில்துறையினர் செப்டம்பர் 1-ம் தேதி முதல் அமல்படுத்தலாம் என கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் அரசு ஜூலை 1-ம் தேதி அமல்படுத்த வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளதாக வனஜாசர்னா கூறினார்.
ஜிஎஸ்டி அமலாக்கம் குறித்த 7 விதிகளுக்கு கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. இருப்பினும் தேடுதல் நடத்துவது, பொருள் களைக் கைப்பற்றுவது, விதிகளை மீறுவோரைக் கைது செய்வது தொடர்பான விதிமுறைகள் இன்னும் வெளியிடப்படவில்லை. இதற்கான வழிகாட்டுதலை எதிர் நோக்கியிருப்பதாக அவர் கூறினார்.
வரி குறைப்பின் பலன் பொதுமக்களைச் சென்றடைய வேண்டும் என்பதில் மத்திய அரசு கவனமாக உள்ளது. இதனால் பொருள்களின் விலை குறைகிறதா என்பதும் கண்காணிக்கப்படும். சிபிஇசி-யின் புதிய செயல்வடிவம் மற்றும் செயல்பாட்டு முறைகுறித்த விவரம் ஜூன் 10-ம் தேதி வெளியிடப்படும். இது தொடர்பான அறிவிக்கையை தனது துறை வெளியிடும் என்று குறிப்பிட்டார்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.