வடகொரியாவுடனான எல்லையோர கட்டுப்பாட்டை அதிகரித்த சீனா.


வடகொரியாவுடனான எல்லையோர கட்டுப்பாட்டை சீனா அதிகரித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
தொடர்ந்து அணுஆயுத ஏவுகணை சோதனைகளில் ஈடுபட்டு வரும் வடகொரியாவின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக சீனா இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கிழக்கு ஆசியாவுக்கான அமெரிக்க பிரதிநிதி கூறும்போது, "வடகொரியாவுடனான எல்லையோர கட்டுப்பாட்டை சீனா அதிகரித்துள்ளதாக அந்நாடு தெரிவித்துள்ளது. மேலும் சீனா- வடகொரியா எல்லையோரத்தில் சீனபோலீஸ் அதிகாரிகள் சுங்க ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்" என்றார்.
கடந்த சில வருடங்களுக்கு முன் வடகொரியாவிலிருந்து நிலக்கரி எற்றுமதி செய்வதை சீனா நிறுத்திக் கொண்டது
சீனா-வடகொரியா உறவு என்பது அவர்களது பிராந்தியத்தின் முக்கியதுவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஆனால் வடகொரியாவின் தொடர் அணுஆயுத ஏவுகணை சோதனைகள் இரு நாடுகளின் உறவில் மேலும் பாதிப்பை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக வடகொரியாவின் தொடர் ஏவுகணை சோதனையால் அதிருப்தி அடைந்த ஐ. நா. சபை அந்நாட்டின் மீதான பொருளாதாரத் தடையை அதிகரிக்க வேண்டும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Labels:

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.