புதிய மதுபான கடைகள் வழக்கு: 4 வாரத்தில் நடவடிக்கை எடுக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு.


தமிழகத்தில் புதிய இடங்களில் மதுபான கடைகள் திறப்பதற்கு எதிராக அளிக்கப்படும் மனுக்கள் மீது 4 வாரத்தில் முடிவெடுக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உச்சநீதிமன்ற உத்தரவால் தமிழகத்தில் நெடுஞ்சாலைகளில் இருந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மதுக்கடைகள் மூடப்பட்டன. இந்நிலையில், மூடப்பட்ட கடைகளை வேறு இடங்களில் திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, உயர்நீதிமன்ற கிளைக்கு உட்பட்ட 13 மாவட்டங்களிலும் புதிய இடங்களில் டாஸ்மாக் கடைகளை திறக்க தடை கோரி உயர் நீதிமன்ற கிளையில் வழக்குகள் குவிந்து வருகின்றன. இந்த வழக்குகள் அனைத்தும் நீதிபதிகள் எம்.வி.முரளிதரன், என்.சேஷசாயி அமர்வில் விசாரணைக்கு வந்தன. விசாரணைக்கு பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
புதிய இடங்களில் டாஸ்மாக் மதுக்கடை திறப்பதற்கு எதிராக அளிக்கப்படும் மனுக்கள் மீது மாவட்ட ஆட்சியர், டாஸ்மாக் மண்டல மேலாளர்கள் தகுதி மற்றும் சட்டப்படி 4 வாரத்தில் முடிவெடுக்க வேண்டும்.
டாஸ்மாக் கடைகள் தொடர்பாக தமிழ்நாடு அரசு/ கே.பாலு வழக்கில் உச்ச நீதிமன்றம் 31.3.2017-ல் பிறப்பித்த உத்தரவு, டி.ரமேஷ்/ நாமக்கல் ஆட்சியர் வழக்கில் சென்னை உயர்நீதி மன்றத்தின் முதல் அமர்வு 18.4.2017-ல் பிறப்பித்த உத்தரவு மற்றும் 1937-ம் ஆண்டின் தமிழ் நாடு மதுவிலக்கு சட்டத்தின் அடிப்படையில் 2003-ல் உருவாக்கப்பட்ட தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகள் அடிப்படையில் அந்த மனுக்கள் மீது அதிகாரிகள் முடிவெடுக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.