இன்று நாடு முழுவதும் நடைபெறுகிறது மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு.


மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கான 56 ஆயிரம் இடங்களில் சேருவதற்கான நீட் எனப்படும் தேசிய தகுதி காண் நுழைவு தேர்வை நாடு முழுவதும் சுமார் 11 லட்சத்து 50 ஆயிரம் பேர் இன்று எழுதுகின்றனர். மத்திய இடை நிலைக் கல்வி வாரியம் நடத்தும் இந்த தேர்வை தமிழகத்தில் மட்டும் 88 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்கின்றனர். இதற்காக நாடு முழுவதும் 103 தேர்வு மையங்களும், தமிழகத்தில் சென்னை, கோவை, சேலம், திருச்சி உள்ளிட்ட 8 இடங்களிலும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இன்று காலை 10 மணி முதல் பிற்பகல் ஒரு மணிவரை தேர்வு நடைபெறும். மாணவர்கள் காலை 9 மணி முதல் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டு, 9.45 மணிவரை அவர்களுக்கான நுழைவுச்சீட்டுகள் சோதனை செய்யப்படும். 9.30 க்கு பிறகு செல்லும் மாணவர்கள் தேர்வறைக்குள் அனுமதிக்கபட மாட்டார்கள். நீலம் அல்லது கறுப்பு நிற பால்பாயிண்ட் பேனா கொண்டே தேர்வை எழுத வேண்டும்.
ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், அசாமி, வங்காளம், குஜராத்தி, மராத்தி, ஒடியா போன்ற 10 மொழிகளில் தேர்வு நடைபெறுகிறது. இதில் இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் என்ற 4 பாடப்பிரிவுகளில் இருந்து தலா 45 கேள்விகள் என 180 கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொரு கேள்விக்கும் 4 மதிப்பெண்கள் வீதம் 720 மதிப்பெண்களுக்கு தேர்வானது நடைபெறும். தவறாக அளிக்கும் பதிலுக்கு ஒரு மதிப்பெண் குறைக்கப்படும். முதல் மதிப்பெண் பெற்றவரின் மதிப்பெண் எவ்வளவோ அதில் பாதி தான் தகுதி மதிப்பெண்ணாக கணக்கில் கொள்ளப்படும்.
தேர்வு மையத்தினுள் கைப்பேசி, கைக்கடிகாரங்கள், கைப்பை, கால்குலேட்டர், கேமரா, ஹெட்போன், பெண் டிரைவ் போன்ற பொருட்களை எடுத்துச் செல்லக் கூடாது. மோதிரம், தோடு, மூக்குத்தி, செயின், செயின் டாலர், பேட்ஜ், சட்டை பின் உள்ளிட்ட அணிகலன்களை பயன்படுத்தக் கூடாது.
அரைக் கை வைத்த லேசான ஆடைகளையே அணிய வேண்டும். ஆடையில் பெரிய பொத்தான்களோ, பேட்ஜ்கள், பின்களோ, பூக்களோ இருக்கக் கூடாது. ஷூ வகை காலணிகளை அணியக் கூடாது. இந்த விதிமுறைகளை மீறினால் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சி.பி.எஸ்.இ., எச்சரித்துள்ளது.
தேர்வுக்கான அனுமதி அட்டை, பாஸ்போர்ட் புகைப்படம், அனுமதி அட்டையின் இரண்டாவது பக்கம் ஒட்டுவதற்கு தேவையான அஞ்சல் அட்டை வடிவிலான புகைப்படம் ஆகியவற்றை மட்டுமே கொண்டு செல்ல முடியும்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.