நேச்சுரல் ஸ்கில்ஸ் அகாடமி என அழகுக் கலை படிப்பு நடத்துவதாகக் கூறி பணம் வசூலித்து மோசடி.நேச்சுரல் ஸ்கில்ஸ் அகாடமி என்ற பெயரில், பியூட்டிசியன் கோர்ஸ் நடத்தப்படும் என நாளிதழ்களில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.
இதை நம்பி, ஆந்திராவைச் சேர்ந்த 4 பேர், மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதியைச் சேர்ந்த 12 பேர் என மொத்தம் 16 பேர், சென்னை தியாகராய நகரில் உள்ள நேச்சுரல் ஸ்கில்ஸ் அகாடமி அலுவலகத்தில் பணம் கட்டியுள்ளனர். 16 மாணவர்களிடமிருந்து மொத்தம் சுமார் 6 லட்ச ரூபாய், காசோலைகள் மூலம் வசூலிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அந்த காசோலைகள் வீரா கன்சல்டன்சி என்ற பெயரில் மாற்றப்பட்ட நிலையில், பணம் கட்டிய மாணவர்களுக்கு பியூட்டிசியன் கோர்ஸ் எதுவும் நடத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது. மாணவர்கள் நேச்சுரல் ஸ்கில்ஸ் அகாடமியை நடத்திய விக்னேஷ், கணேஷ், மலர், யுவராஜ், தேன்மொழி, சாமுவேல் ஆகியோரை அணுகி கேட்டபோது அவர்கள் அலட்சியாக பதிலளித்தாக புகார் எழுந்துள்ளது.
பாண்டி பஜார் காவல்நிலையத்தில் புகார் அளித்தபோது, அங்கு புகாரை வாங்கிக் கொள்ளவில்லை எனக்கூறி, மாணவ-மாணவிகள் 16 பேரும் மாநகரக் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.