வங்கக் கடலில் உருவானது மோரா புயல்.


வங்கக் கடலில் கொல்கத்தாவிற்கு தெற்கே 950 கிலோமீட்டர் தூரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதாகவும் இது மேலும் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளதாகவும், வரும் 30-ஆம் தேதி வங்கதேசம் அருகே கரையைக் கடக்கக் கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது அது புயல் சின்னமாக உருவாகியுள்ள நிலையில் அதற்கு மோரா என்று பெயரிடப்பட்டுள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் நேற்று சில துறைமுகங்களில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்ட நிலையில் இன்று புயல் சின்னத்தையடுத்து கடலூர் நாகை, புதுச்சேரி, காரைக்கால், எண்ணூர், பாம்பன் துறைமுகங்களில் 2-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இந்தப் புயல் காரணமாக தமிழக வானிலையில் எந்த மாற்றமும் ஏற்பட வாய்ப்பில்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளபோதிலும் ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு செல்லும் மீனவர்களை எச்சரிக்கும் வகையில் புயல் எச்சரிக்கைக் கூண்டுகள் ஏற்றப்பட்டுள்ளன.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.