வங்கதேசத்தின் சிட்டகாங் நகருக்கு அருகே கரையைக் கடந்தது மோரா புயல்.


வங்கக்கடலில் உருவான மோரா புயல் இன்று காலை வங்கதேசத்தில் கரையைக் கடந்தது. கொல்கத்தாவில் இருந்து 400 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்த மோரா புயல் வடகிழக்கு நோக்கி நகர்ந்து, வங்கதேசத்தில் உள்ள சிட்டகாங் அருகே இன்று காலை கரையைக் கடந்தது. அப்போது மணிக்கு 117 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சிட்டகாங் நகரில் இருந்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் ஏற்கெனவே பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். மோரா புயல் கரையைக் கடந்ததால் இந்தியாவில் மிசோராம், நாகாலாந்து, மணிப்பூர், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் கடுமையான மழை பெய்து வருகிறது. மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க இந்திய கடற்படையின் கிழக்கு கடற்படைக் கப்பல்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.