இந்தியை நாங்கள் எதிர்க்கவில்லை, இந்தி திணிப்பை தான் எதிர்க்கிறோம்: மு.க.ஸ்டாலின்.


வேலூர்: தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த மாதம் 28-ந்தேதி நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், இந்தித் திணிப்பை கண்டித்தும், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக்கோரியும் மாவட்ட வாரியாக கருத்தரங்கு நடத்த தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி வேலூர் அனுகுலாஸ் கன்வென்ஷன் சென்டரில் இன்று மாலை 6 மணிக்கு இந்த கருத்தரங்கை தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர் இந்தியை நாங்கள் எதிர்க்கவில்லை, இந்தி திணிப்பை தான் எதிர்க்கிறோம். 

அனைத்து பல்கலைக்கழகங்களிலும் இந்தியை கட்டாயமாக்க மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. ஆசிரியர் தினத்தை 'குரு உட்சவ்' என்ற பெயரில் கொண்டாட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 

மத்திய அரசு பல்கலைகழகங்களில் இந்தியை கட்டாயமாக்க முயற்சிக்கிறது. நீட் தேர்வு ரத்துக்கு முதல்வர் பழனிசாமி அழுத்தமாக குரல் கொடுக்கவில்லை என்று கூறினார்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.