மினரல் வாட்டர் நிறுவனங்கள் திடீர் காலவரையற்ற வேலைநிறுத்தம்.


சோதனை என்ற பெயரில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கெடுபிடி காட்டுவதாக புகார் கூறியுள்ள மினரல் வாட்டர் நிறுவனங்கள், இன்று முதல் திடீர் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கியுள்ளன.
தமிழகம் முழுவதும் சுமார் ஆயிரத்து 500 மினரல் வாட்டர் தயாரிக்கும் நிறுவனங்கள் இயங்கி வரும் நிலையில், நிலத்தடி நீர்மட்டம் குறைவதைக் காரணம் காட்டி வேலூர் மாவட்டம் வாணியம்பாடி மற்றும் சென்னை அருகே உள்ள மதுரவாயல் ஆகிய இடங்களில் செயல்பட்டு வந்த 33 மினரல் வாட்டர் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாகவும், சோழவரத்தில் இயங்கி வரும் 80 நிறுவனங்களை மூடுமாறு உணவுப்பாதுகாப்பு அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்தநிலை தொடர்ந்தால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதுடன் மக்களுக்கு கிடைக்க வேண்டிய அத்தியாவசிய பொருளான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைக்காமல் தடுப்பாடு ஏற்படும் என்று தமிழ்நாடு அடைக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதிகாரிகளின் கெடுபிடியைக் கண்டிப்பதுடன் மூடப்பட்டுள்ள நிறுவனங்களை திறக்க அனுமதி கேட்டும், ஜி.எஸ்.டி.யில் மினரல் வாட்டருக்கு 18 சதவீத வரி வசூலிக்கப்படும் என்ற அறிவிப்பை திரும்ப பெற வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை மினரல் வாட்டர் நிறுவனங்கள் தொடங்கியுள்ளன.
வேலைநிறுத்தம் தொடர்ந்தால் குடிநீர் கேன்கள் பதுக்கப்பட்டு, 30 ரூபாய்க்கு விற்கப்படும் கேனின் விலை 100 ரூபாயாக உயரக்கூடும் என்று உரிமையாளர்கள் எச்சரித்துள்ளனர். இதுதொடர்பாக நாளை மற்றும் நாளை மறுநாள் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.