காவிரி பகுதிகளில் கனமழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,380 கன அடியாக அதிகரிப்பு..


நீர்வரத்து அதிகரிப்பால், மேட்டூர் மட்டும் பவானிசாகர் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் சுமார் 2 லட்சத்து 47 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
கடந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால், கீழ்பவானி வாய்க்கால், தடப்பள்ளி அரக்கன்கோட்டை வாய்க்கால், காளிங்கராயன் வாய்க்காலில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படாததால் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டிருந்த பயிர் கருகி சேதமடைந்தன. இந்நிலையில், பவானிசாகர் அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மாவட்டத்தில் நேற்று இரவு மழை பெய்ததால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
இதன்காரணமாக அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் ஒரு அடி உயர்ந்து, இன்று காலை 8 மணிக்கு 39 புள்ளி ஆறு எட்டு அடியாக இருந்ததது. அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு ஆயிரத்து 843 கன அடியாக இருக்கும் நிலையில், குடிநீருக்காக பவானி அணையில் இருந்து 120 கன அடியும், கீழ்பவானி வாய்க்காலில் 5 கனஅடி நீரும் திறக்கப்படுகிறது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
பருவமழை பொய்த்ததாலும், காவிரியில் தண்ணீர் திறக்கப்படாததாலும் வறண்டுபோன ஒகேனக்கல்லில் தற்போது நீர் வரத்து வினாடிக்கு 800 கன அடியாக உள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 847 கன அடியாக இருந்த நிலையில், இன்று காலை ஆயிரத்து 380 கன அடியாக உயர்ந்துள்ளது. அதன்படி, இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 19 புள்ளி ஒன்பது ஐந்து அடியாகவும் நீர் திறப்பு 500 கன அடியாகவும் உள்ளது.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.