மருத்துவ பட்டமேற்படிப்பில் காலி இடங்களை நிரப்ப 2-ம் கட்ட கலந்தாய்வு இன்று தொடக்கம்.


மருத்துவப் பட்டமேற்படிப்புகளுக்கான இரண்டாம்கட்ட கலந்தாய்வு இன்று தொடங்கி வரும் 27-ம் தேதி வரை நடைபெறுகிறது.
தமிழகத்தில் 21 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இதில் 13 கல்லூரிகளில் மட்டும் மருத்துவப் பட்டமேற்படிப்புகள் இருக்கின்றன. அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 50 சதவீத இடங்கள் போக, மருத்துவ பட்டமேற்படிப்புகளுக்கு (எம்டி, எம்எஸ்) 562 இடங்களும், மருத்துவ பட்டய மேற்படிப்புக்கு (டிப்ளமோ) 200 இடங்களும் மாநில அரசுக்கு உள்ளன.
சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல்மருத்துவக் கல்லூரியில் பல் மருத்துவ பட்ட மேற்படிப்புக்கு (எம்டிஎஸ்) அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 50 சதவீதம்போக 19 இடங்கள் மாநில அரசுக்கு இருக்கின்றன.
இந்த இடங்களுக்கு 2017-18ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான முதல்கட்ட கலந்தாய்வு கடந்த 8-ம் தேதி தொடங்கி 11-ம் தேதி வரை நடைபெற்றது. இதில் மருத்துவ பட்ட மேற்படிப்புகள், பட்டய மேற்படிப்பில் 40 இடங்கள், பல் மருத்துவ பட்ட மேற்படிப்பில் 2 இடங்கள் காலியாக இருந்தன.
இதைத் தொடர்ந்து 8 நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களில் உள்ள 604 மருத்துவப் பட்டமேற்படிப்புகளுக்கான கலந்தாய்வு கடந்த 18-ம் தேதி தொடங்கி 20-ம் தேதி வரை நடைபெற்றது.
இதில் 451 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. மீதம் 153 இடங்கள் காலியாக இருந்தன. 9 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டுக்கு உள்ள 73 பட்ட மேற்படிப்பு இடங்களுக்கு கடந்த 22-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை நடந்த கலந்தாய்வில் 50 இடங்கள் நிரப்பப்பட்டன. மீதம் 23 இடங்கள் காலியாக இருந்தன.
இந்நிலையில், மருத்துவப் பட்டமேற்படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு இன்று தொடங்கி வரும் 27-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதல்கட்ட கலந்தாய்வில் காலியாக இருந்த 40 இடங்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் அண்ணாமலை பல்கலைக் கழகத்தின் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.