முதுநிலை மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான கலந்தாய்வு நாளை தொடங்குகிறது.


முதுநிலை மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் வெளியானதை அடுத்து கலந்தாய்வு நாளை தொடங்குகிறது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி மருத்துவ கல்வி இயக்ககம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்புப் பிரிவு கலந்தாய்வு திங்கட்கிழமை நண்பகல் 12 மணிக்கு தொடங்குகிறது. அரசு கல்லூரிகளுக்கான கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை நடக்கிறது. பொதுப்பிரிவுக்கான கலந்தாய்வு மே 9 முதல் 11 வரை நடைபெறுகிறது. மே 11-ம் தேதி எம்டிஎஸ் படிப்புக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. கவுன்சிலிங்கிற்கு வரும் மாணவர்கள் அந்தந்த பிரிவுக்கு ஏற்ப 500, 20 ஆயிரம் மற்றும் 30 ஆயிரம் ரூபாய்க்கான டிடியுடன், குறிப்பிட்ட நேரத்துக்கு முன்கூட்டியே வரவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இறுதிகட்ட கலந்தாய்வில் அசல் சான்றிதழ் இன்றி வருபவர்களுக்கு அனுமதி கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அழைப்புக் கடிதத்தை www.tnmedicalselection.org மற்றும் www.tnhealth.org என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.