தேசத்துரோக வழக்கில் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோவுக்கு ஜாமீன்.தேசத்துரோக வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு ஜாமீன் வழங்கி, சென்னை 4ஆவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் கடந்த 2009ஆம் ஆண்டு நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைப்புலிகளை ஆதரித்தும், இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாகவும் ஆயிரம் விளக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் ஜாமீன் கோராமல் சிறைக்கு செல்ல தயாராக இருப்பதாக அவர் கூறியதை அடுத்து, புழல் சிறையில் அடைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். புழல் சிறையில் 50 நாட்களை கழித்த வைகோ, நேற்று ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு இன்று சென்னை 4ஆவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், வைகோவுக்கு ஜாமீன் வழங்குவதை போலீஸ் எதிர்க்கவில்லை என்றும், வைகோ தானாக வந்து சரண் அடைந்ததால் அவரை ஜாமீனில் வெளியிடலாம் என்றும் தெரிவித்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி புருஷோத்தமன், வைகோவுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.