கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் காலவரையற்ற வேலைநிறுத்தம்: மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் எச்சரிக்கை.


குறைந்தபட்ச ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறை வேற்றாவிட்டால் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம் என்று மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை ரூ.26 ஆயிரமாக உயர்த்த வேண்டும், புதிய ஓய்வூதியத் திட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் சார்பில் சென்னை அண்ணாசாலையில் உள்ள தலைமை தபால் அலுவலகத்தில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்த சம்மேளன பொதுச் செயலாளர் துரைப்பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்திய அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக கடந்தாண்டு ஜூன் மாதம் மத்திய நிதிஅமைச்சர், ரயில்வே அமைச்சர் மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினோம்.
அப்போது மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியமான ரூ.18 ஆயிரத்தை ரூ.26 ஆயிரமாக உயர்த்த வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினோம். எங்கள் கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்றுவதாக அமைச்சர்கள் உறுதிமொழி அளித்தனர். ஆனால் 10 மாதங்கள் ஆகியும் கோரிக்கைகள் நிறைவேறவில்லை.
இந்நிலையில் மத்தியஅரசு ஊழியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் மாநில, மாவட்ட தலைநகரங்களில் மத்திய அலுவலகங்கள் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெறுகிறது. வரும் ஜூன் 22-ம் தேதி நாடு தழுவிய மனித சங்கிலிப் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். அதன்பிறகும் எங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றாவிட்டால் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.