'ராப்தா' இந்தி படக்குழுவினருக்கு எதிராக 'மகதீரா' படக்குழு வழக்கு.


ஜூன் 9-ம் தேதி வெளியாகவுள்ள 'ராப்தா' இந்தி படத்துக்கு எதிராக, 'மகதீரா' படக்குழு வழக்கு தொடுத்திருக்கிறது.
சுஷாந்த் சிங், கீர்த்தி சானுன், வருண் சர்மா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள இந்தி படம் 'ராப்தா'. தினேஷ் விஜயன் இயக்கியுள்ள இப்படம் ஜுன் 9-ம் தேதி வெளியாகவுள்ளது. இதன் ட்ரெய்லர் மற்றும் பாடல்களை வெளியிட்டு படக்குழு விளம்பரப்படுத்தி வருகிறது.
இப்படக்குழுவுக்கு எதிராக தெலுங்கில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'மகதீரா' படக்குழுவினர் ஹைதராபாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்கள். ராஜமெளலி இயக்கத்தில் ராம்சரண், காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடிப்பில் பெரும் வரவேற்பைப் பெற்ற படம் 'மகதீரா' என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் இந்தி ரீமேக் நீண்ட நாட்களாக பேச்சுவார்த்தையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
'மகதீரா' படத்தயாரிப்பாளர்களான கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில், "'மகதீரா' படத்தின் ஒரிஜினல் தயாரிப்பாளர்களாகிய நாங்கள் கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் சில ட்ரெய்லர் உள்ளிட்ட விளம்பரங்களைப் பார்த்தோம். அதன் மூலம் எங்கள் 'மகதீரா' படத்தை இந்தியில் 'ராப்தா' என்ற பெயரில் ரீமேக் செய்திருப்பதைத் தெரிந்து கொண்டோம்.
இது காப்புரிமை கொள்கைக்கு எதிரானது. எனவே, நாங்கள் ஹைதராபாத் நீதிமன்றத்தில் படத்தை வெளியிட இடைக்காலதடை கோரி வழக்கு தொடர்ந்திருக்கிறோம். 'ராப்தா' படத் தயாரிப்பாளர்களுக்கு ஹைதராபாத் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அப்படத்தை வெளியிடுவதா கூடாதா என்பது குறித்த முடிவை நீதிமன்றம் வரும் ஜூன் 1-ம் தேதி அறிவிக்கும்" என்று தெரிவித்துள்ளார்கள்.
'மகதீரா' படக்குழு தொடுத்துள்ள வழக்கால், ஜுன் 9-ம் தேதி 'ராப்தா' படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.