கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது.


நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமாக அமைந்துள்ள கொடநாடு எஸ்டேட்டில், கடந்த ஏப்ரல் 24-ஆம் தேதி காவலாளி ஓம் பகதூர் என்பவர் மர்ம கும்பலால் கொலை செய்யப்பட்டார். மேலும், மற்றொரு காவலாளி கிஷன் பகதூர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொலை செய்த மர்ம கும்பல் பங்களாவிற்குள் நுழைந்து விலையுயர்ந்த தங்கம் மற்றும் வைர பொருட்களை கொள்ளையடிக்க முயன்றதாக கூரப்படுகிறது.
இதையடுத்து, நீலகிரி மாவட்ட எஸ்.பி. முரளிரம்பா தலைமையில் தனிப்படை போலீஸார் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். விசாரணையில், கொலை சம்பவத்தில் 11 பேர் ஈடுபட்டிருக்கலாம் எனவும், ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ் என்பவரும் அதில் ஒருவர் என்பது தெரியவந்தது. இந்நிலையில், கனகராஜ் கடந்த ஏப்ரல் 29-ஆம் தேதி சேலம் அருகே கார் விபத்தில் உயிரிழந்தார். தேடப்படும் மற்றொரு குற்றவாளியான சயான் என்பவர் அதே நாளில், கேரளாவில் நிகழ்ந்த மற்றொரு விபத்தில் படுகாயமடைந்து, தற்போது கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே கொலை சம்பவம் தொடர்பாக 8 பேரை போலீஸார் கைது செய்தனர்.
இந்நிலையில், தலைமறைவாக இருந்த ஜித்தின் என்ற குட்டியை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர் எங்கு வைத்து கைது செய்யப்பட்டார் என்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை. அவரை கோத்தகிரி காவல் நிலையத்தில் வைத்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணை முடிந்த பின், அவரை கொலை சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு அழைத்து சென்று அங்கு போலீஸார் விசாரணை மேற்கொள்வர் என கூறப்படுகிறது.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.