அகழாய்வு முடிந்தபின் கீழடியில் அருங்காட்சியகம் அமைக்கப் பரிசீலனை: மத்திய தொல்லியல்துறை அதிகாரி பேட்டி.


அகழாய்வுப் பணிகள் முடிந்தபின்னர் கீழடியில் அருங்காட்சியகம் அமைப்பது குறித்துப் பரிசீலிக்கப்படும் என்று மத்திய தொல்லியல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீராம் தெரிவித்துள்ளார்.
தமிழர்களின் தொன்மை வரலாறு, நாகரிகம் குறித்து மத்திய தொல்பொருள் கண்காணிப்பாளர் ஸ்ரீராம் தலைமையில் கீழடியில் இன்று (சனிக்கிழமை) மூன்றாம்கட்ட அகழாய்வுப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த ஸ்ரீராம் பேசும்போது, செப்டம்பர் 30 வரை மூன்றாம்கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெறும். கிடைக்கும் பொருட்களை முறையாக ஆய்வு செய்த பிறகே முடிவுகளைப் பற்றிக் கூற முடியும்.
அகழாய்வுப் பணிகள் முடிந்தபின்னர் கீழடியில் அருங்காட்சியகம் அமைப்பது குறித்துப் பரிசீலிக்கப்படும்.
மத்திய அரசின் நிதியுதவியால்தான் ஆராய்ச்சிப்பணிகள் நடைபெறுகின்றன. மாநில அரசும், மாவட்ட நிர்வாகமும் முழு ஒத்துழைப்பை அளிக்கின்றன. இந்த ஊர் மக்களுக்கும் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம் என்று தெரிவித்தார்.
முதல் இரண்டு கட்டங்களிலும் தொல்லியல்துறை கண்காணிப்பாளராக இருந்த கே.அமர்நாத் ராமகிருஷ்ணா சிறப்பாக செயல்பட்டு வந்ததை அடுத்து, அவர் திடீரெனப் பணியிட மாற்றம் செய்யப்பட்டதும், ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் புராதனச் சின்ன பராமரிப்பு துணைக் கண்காணிப்பாளர் ஸ்ரீராமன், கீழடி அகழ்வாய்வுக்கு மாற்றப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.