காஷ்மீர் சியாச்சின் பகுதியில் பாகிஸ்தான் விமானப்படை விமானங்கள் ரோந்து, எல்லையில் போர் பதற்றம்.


காஷ்மீர் மாநிலம் சியாச்சின் அருகே பாகிஸ்தான் விமானப்படையினர் திடீர் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளதால், எல்லையில் போர் பதற்றம் உருவாகியுள்ளது.
எல்லைக்கு அப்பால் இருந்து அடிக்கடி அத்துமீறித் தாக்குதல் நடத்தி வரும் பாகிஸ்தான் ராணுவம், தீவிரவாதிகள் இந்திய எல்லையில் ஊடுருவ உதவி செய்வதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. இதையடுத்து, எல்லைக்கட்டுப்பாட்டுக் கோட்டருகே, பாகிஸ்தான் ராணுவ நிலைகளை இந்திய ராணுவத்தினர் தாக்கி அழித்த வீடியோ காட்சிகள் நேற்று வெளியானது.

இந்த நிலையில், காஷ்மீர் மாநிலம் சியாச்சின் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை விமானங்கள் திடீர் ரோந்துப்பணியில் ஈடுபட்டு வருகின்றன. மேலும் இந்திய எல்லை அருகே பாகிஸ்தான் ராணுவ வீரர்களும், போர் விமானங்கள், ராணுவ டாங்கிகளை தயார்படுத்தும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. சர்வதேச எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டுப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவ வீரர்களும் தயார் நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே, சியாச்சின் பகுதிக்கு பாகிஸ்தான் ராணுவத் தளபதி விரைந்துள்ளதாக கூறப்படுவதால், எல்லையில் போர் பதற்றம் உருவாகியுள்ளது.
பாகிஸ்தான் படைகளின் நடவடிக்கையை அடுத்து, இந்திய ராணுவமும் உஷார்படுத்தப்பட்டுள்ள நிலையில், சியாச்சின் பகுதிக்குள் பாகிஸ்தான் விமானங்கள் எதுவும் பறக்கவில்லை என இந்திய விமானப்படை மறுத்துள்ளது.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.