2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றார் அரவிந்த் கெஜ்ரிவால் -கபில் மிஸ்ரா.



டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், அமைச்சர் சத்யேந்திர ஜெயினிடம் இருந்து 2 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியதாக, அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட கபில் மிஸ்ரா பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார்.
ஆம்ஆத்மி கட்சியில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி வரும் குமார் விஸ்வாசுக்கு நெருக்கமானவரான கபில் மிஸ்ரா நேற்று அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து இன்று மிகப்பெரும் ஊழலை அம்பலப்படுத்தப் போவதாக நேற்று அவர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் டெல்லி ஆளுநர் அனில் பைஜாலை, கபில் மிஸ்ரா சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மிஸ்ரா, முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது வீட்டில் வைத்து, அமைச்சர் சத்யேந்திர ஜெயினிடம் இருந்து 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாகவும் அதனை தாம் கண் கூடாக கண்டதாகவும் குற்றம்சாட்டினார். கெஜ்ரிவாலின் உறவினருக்கு 50 கோடி ரூபாய் நிலம் ஒப்பந்த விவகாரத்தில் இந்த லஞ்சப் பணம் கொடுக்கப்பட்டதாக அவர் கூறினார். கெஜ்ரிவால் பெற்ற அந்த 2 கோடி ரூபாய் எங்கே சென்றது என்று கேள்வி எழுப்பிய அவர், இது குறித்து ஆளுநரிடம் புகார் அளித்துள்ளதாக தெரிவித்தார். கெஜ்ரிவால் லஞ்சம் பெற்றது தொடர்பான ஆதாரங்களை ஊழல் தடுப்பு பிரிவிடம் தெரிவித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். ஆம் ஆத்மியில் இருந்து விலகி, பாஜகவில் சேரும் திட்டமில்லை என்றும் கபில் மிஸ்ரா கூறினார்.
இதனிடையே, கபில் மிஸ்ராவின் குற்றச்சாட்டில் உண்மையில்லை என டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ்சிசோடியா தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.