காளீஸ்வரி நிறுவனம் ரூ.90 கோடி வரி ஏய்ப்பு – வருமான வரித்துறை.


கோல்டுவின்னர், தீபம் விளக்கேற்றும் எண்ணெய், கார்டியா லைஃப் போன்ற 20க்கும் மேற்பட்ட எண்ணெய் வகைகளை காளீஸ்வரி நிறுவனம் தயாரித்து விற்பனை செய்து வருகிறது.
வெளிநாட்டு ஏற்றுமதியையும் சேர்த்து ஆண்டுக்கு 3 ஆயிரத்து 250 கோடி ரூபாய் வருமான ஈட்டும் காளீஸ்வரி நிறுவனம், கடந்த 3 ஆண்டுகளாக வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாகவும், சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்ததாகவும் புகார் எழுந்தது. இதன் அடிப்படையில் அந்த நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த புதன்கிழமையன்று சோதனையை தொடங்கினர்.
தமிழகத்தில் 38 இடங்களிலும், நாடு முழுவதும் 54 இடங்களிலும் அதிகாரிகள் சோதனை செய்தனர். சென்னை மயிலாப்பூரில் உள்ள இந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகம், சுத்திகரிப்பு ஆலைகள் என சனிக்கிழமை வரை தொடர்ந்து 4 நாட்களாக சோதனை நடைபெற்றது. சோதனையில் வரி ஏய்ப்பு தொடர்பான பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றிய அதிகாரிகள், அவற்றை கணக்கிடும் பணியில் ஈடுபட்டனர்.
இதன்படி காளீஸ்வரி நிறுவனமானது, கடந்த 3 ஆண்டுகளில் 90 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்திருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதனை நிறுவனத்தின் உரிமையாளரான விருதுநகரைச் சேர்ந்த முனுசாமி ஒப்புக் கொண்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.